search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா"

    மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தைக் கண்டித்து புதுவையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill

    புதுச்சேரி:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

    மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், டோல்கேட் கட்டணத்தை கைவிட வேண்டும், இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுவையில் ஐ.என். டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

    அரசு, தனியார் பஸ் தொழிலாளர்கள், ஆட்டோ, டெம்போ, சுற்றுலா வாகனம், மினி லோடு கேரியர், மணல் லாரி, சரக்கு லாரிகள், வாகன உதிரிப்பாக கடைகள், ஒர்க்ஷாப் ஆகிய தொழிற்சங்கங்கள் ஆதரித்தன.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. போராட்டத்தினால் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதனால் புதிய பஸ் நிலையம் வெளிச்சோடி காணப்பட்டது.

    பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பணிக்கு செல்வோர் பணிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். கல்லூரி மாணவர்களை ஏற்றி செல்லும் கல்லூரி பஸ்கள் ஓடியது.

    தமிழக பகுதியில் இருந்து புதுவைக்கு வரும் மற்றும் புதுவை வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே ஓடியது. இதில் பயணிகள் நெருக்கியடித்தபடி சென்றனர்.

    பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் தனியார் பள்ளி பஸ்கள் பெரும்பாலும் ஓடவில்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்து இருந்தன.

    டெம்போ, ஆட்டோ, லாரி, மினி லாரி, லோடு கேரியர் ஆகியவையும் ஓட வில்லை. இவை அதற்கான ஸ்டாண்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. வாகன உதிரிப்பாக கடைகள், ஒர்க் ஷாப்புகள் மூடி கிடந்தன.

    போராட்டத்தையொட்டி புதிய, பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தீவிர வாகன ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.

    ×